இலங்கையில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#SriLanka
#cancer
Dhushanthini K
2 months ago

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் கூறுகிறது.
இதற்கு மோசமான பழக்கவழக்கங்களும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாமையும் முக்கியக் காரணங்களாகும் என வைத்தியர் ஸ்ரீனி அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நோய் வயதானவர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது எனக் கூறியுள்ள அவர், இலங்கையில் கூட, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 ஆண்களும் 1,500 பெண்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




