யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு ! இரு மணி நேரத்தில் மீட்ட பொலிஸார்.

#SriLanka #Police
Mayoorikka
2 months ago
யாழில்  பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு ! இரு மணி நேரத்தில் மீட்ட  பொலிஸார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வல்லைப் பகுதியில் வைத்து அறுத்து செல்லப்பட்ட சங்கிலியுடன் சந்தேக நபர் ஒருவர் சாவாச்சேரியில் வைத்து நெல்லியடி பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

 நேற்று புதன்கிழமை (05)காலை 08.25 மணியளவில் வடமராட்சி வல்லைப் பகுதியில் வைத்து, நெல்லியடி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிள் வந்த இருவர் அறுத்து சென்றுள்ளனர்.

 இதில் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை குறித்துக் கொண்ட பெண் இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

 இதனைத் தொடர்ந்து உடனடியாக விசாரணங்களை மேற்கொண்ட நெல்லியடி பொலிஸார், மேற்படி சங்கிலியறுப்பு கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் சாவாச்சேரி நகரில் உள்ள பிரபல நகையகத்திற்கு முன்னதக நிற்பதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல் கிடைத்ததையடுத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் அறுத்த சங்கிலியையும் மோட்டார் சைக்கிளையும் இரு்மணி நேரத்தில் மீட்டதுடன் கொள்ளையன் ஒருவரை கைது செய்துள்ளனர். 

 கொள்ளையர்களால் அறுக்கப்பட்ட தங்கச் சங்கிலியை சாவகச்சேரியில் உள்ள பிரபல நகை வியாபார நிலையத்தில் விற்பனை செய்து சிட்டையையும் பெற்றுக் கொண்டுள்ளார். ஆனாலும் நகைக்குரி பணத்தை பிற்பகல் தரவதாக கூறி நகையை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் மட்டுவில் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கருகில் வைத்தே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நகையை மீட்ட பொலிஸார், நகை உரிமையாளரிடம் காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபரை இன்று(06) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


images/content-image/1741229635.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!