சுங்கத் துறைக்குள் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும்! ஜனாதிபதி

#SriLanka #President Anura
Mayoorikka
2 months ago
சுங்கத் துறைக்குள் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும்! ஜனாதிபதி

காலத்திற்கு ஏற்ற நிறுவன கட்டமைப்பை உருவாக்க இலங்கை சுங்கத்திற்குள் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

 2025 பாதீடு மற்றும் நிறுவன மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை சுங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 

 சுங்கத்தின் செயல்திறனின்மை, மோசடி, ஊழல் மற்றும் பொதுமக்களிடையே காணப்படும் அதிருப்தி குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இதற்குத் தீர்வாக, திணைக்கள செயல்பாடுகளை விரைவுபடுத்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவைகளை சிறப்பாக வழங்குவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

 திணைக்களத்திற்கான புதிய மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை சுங்கத்தில் காணப்படும் முறைகேடுகளை அகற்றக் கடுமையான சட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். 

 மனிதவள முகாமைத்துவம், புதிய ஆட்சேர்ப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். கடந்த ஆண்டு சுங்கம் அடைந்த வருமான இலக்குகளை ஜனாதிபதி பாராட்டியதுடன்,இந்த வருட வருமான இலக்கை அடைய சுங்கத் திணைக்களம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.


பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


images/content-image/1741229635.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!