ராகி இட்லி - செய்முறை விளக்கம்!

ராகி இட்லி
தேவையான பொருட்கள் :
ராகி மாவு - 2 கப்
ரவை - 2 கப்
பச்சை மிளகாய் விழுது - 3 டீஸ்பூன்
இஞ்சி விழுது- 2 டீஸ்பூன்
கெட்டித்தயிர் - 2 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
சமையல் சோடா - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை : ராகி இட்லி செய்வதற்கு முதலில் ராகி மாவு, ரவை இரண்டையும் வறுத்து, தயிரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, மிளகாய் விழுது, பச்சை மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை தயிரில் ஊறிய மாவுடன் தேவையான அளவு உப்பு, சமையல் சோடா சேர்த்து கலக்கவும்.
அடுத்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலக்கி வைத்துள்ள மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். சுவையான ராகி இட்லி தயார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



