நாட்டில் ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு தடை!

#SriLanka #Temple #Lanka4 #speaker #lanka4_news
Mayoorikka
12 hours ago
நாட்டில் ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு தடை!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினத்தின் இயக்குநர் ஆ.ளு. சமி நவாஸின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில், நாட்டின் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், பரீட்சை நிலையங்களுக்கு அருகில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பகல் நேரத்தில் வெளிப்புற ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அவற்றை உட்புறங்களில் மட்டுமே பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 அத்தோடு, வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா தொழுகையை பிற்பகல் 1.00 மணிக்கு முடிக்குமாறும் குறித்த திணைக்களம் நாட்டில் அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் அறிவித்துள்ளது.

 இந்நிலையில், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி, 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் குறித்த செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1742439203.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!