பொலிஸ் மா அதிபர் தென்னகோனுக்கு பிணை மறுக்கப்பட்ட காரணம்?

ஒரு நாட்டின் முக்கிய பதவியான போலீஸ் மா அதிபராக இருந்துவிட்டு , சட்டத்தை மதிக்காமல் 20 நாட்கள், ஒழித்து இருந்த ஒருவர் மீண்டும் ஒழித்து இருக்க மாட்டார் என நம்ப முடியாது.
அத்தோடு அவரால், அவருக்கு எதிராக புகார் அளித்தவர்களை திசை திருப்ப அழுத்தங்கள் ஏற்படலாம். தேசபந்து தென்னக்கோன், இலங்கையில் வாக்குரிமையற்ற நிலையில் வாழ்ந்து வருவதோடு, அவருக்கான நிரந்தர முகவரியும் இல்லை.
எனவே அவர் மீண்டும் ஓடி ஒளிந்தால், அவரை தேடி கண்டுபிடிக்க, அரசு மக்களது பெரும் தொகை பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கும். அவர் தனக்கு முன் பிணை வழங்க வேண்டும் என ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதை பரிசீலித்த நீதவான்கள் அவரை ஒழித்து வைத்திருப்பவர்களுக்கு அல்லது அவருக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக ஒரு வழக்கை தொடுக்க வேண்டும் என இன்னொரு பிரச்சனையை இணைத்தனர்.
எனவே தேசபந்து தென்னக்கோனை ஒழித்து வைத்திருந்தவர்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறார்கள். அவர்கள் யார் என்பதை இவர் சொல்லியாக வேண்டும். அவை தெரியாமல் தேசபந்துவுக்கு பிணை வழங்கப்படாது.
எனவே இப்போதைக்கு பிணை கிடைக்க கூடிய சாத்தியமே இல்லை. அங்குனுகொல பெலச எனும் இடத்தில் இவரை வைத்து இருக்கிறார்கள். அந்த சூழல் மிக மோசமானவை. ரஞ்சன் ராமநாயக்கவை அங்கு தான் கொண்டு போய் முதல் முறையாக வைத்திருந்தார்கள்.
அவர் அங்கிருந்து வெளியே வந்து, அங்கே ஒரு பேயால் கூட இருக்க முடியாது. அவ்வளவு கடினமான ஒரு இடம் என தெரிவித்திருந்தார்.
அதே இடத்தில் இன்று தேசபந்து அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் ஒரு கதிரையிலேயே உட்கார்ந்து இருந்ததாக இப்போது வரும் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



