பெண்களை இழிவு செய்யாதே! (வீடியோ இணைப்பு )

ஒருசில வாரங்களாக முகநூலில் செய்திகள் பலரைப் பற்றி உலாவிக் கொண்டிருக்கிறது சிலர் youtube நடத்துகின்றவர்கள் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களைப் பற்றிய செய்திகளும் பரவலாக அதிகமான ஊடகங்கள் மற்றும் youtubeக்களில் முகநூல்களிலும் பலர் விமர்சனத்திற்கும் போற்றுதலுக்கும் தூண்டுதலுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊழலை ஒழிப்பது என்கின்ற முகம் காட்டாத ஒரு முகநூடாக பல நல்ல விடயங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதேபோல ஒரு சில காதிலே கிடைத்த செய்திகளை அப்படியே போட்டு அவர்கள் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையிலே உண்மை பொய் என்பதை தாண்டி முக்கியமாக நாங்கள் எடுத்துக் கொண்ட விடயம் பெண்கள் பற்றியது அது கவுசல்யாவாக இருக்கட்டும் அல்லது யூட்யூப் சனல் நடத்துகின்ற பெண்ணாக youtube சனலில் வேலை செய்கின்றவர்களாக இருக்கட்டும் அல்லது அவர்கள் ஆதத்தோடு எடுத்து கூறப்பட்ட விடயத்தை தாண்டி அதை எடுத்து மற்றவர்கள் பல youtube சேனல்களை தங்களுடைய சொந்தப் பிழைப்பிற்காக அதாவது பொதுநலத்திற்காக என்பது இரண்டாவது விடயம் சமூகத்திற்காக என்பதும் அடுத்த விடயம் அங்கே சமூக சீர்கேட்டை ஏற்படுத்துகின்ற சில youtube சனல்கள் மற்றும் மற்றவர்களிலேயே சாதாரணமாக ஊகத்தின் ஊடாக பழியை சுமத்துகின்ற ஒரு சில youtube சனல்கள் மற்றும் சில ஊடகங்கள் பொறுப்பானவர்கள் பொறுப்பற்றவர்கள் என்று பலர் பெண்களைப் பற்றி அதிகமாக விமர்சித்து கொண்டு இருக்கிறார்கள்.
இதில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் சரியாக குறிப்பிட்டு இருக்கிறீர்களா உண்மையா பொய்யா என்பதை தாண்டி இங்கே நீங்கள் குறிப்பிடுகின்ற விடயம் பெண்களைப் பற்றி நாங்கள் இங்கே பெண்களைப் பற்றிய நீங்கள் போடுகின்ற பதிவை பற்றி மாத்திரம் தான் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
பெண்களைப் பற்றி போடுகின்ற இந்த பதிவுகளால் நிச்சயமாக பெண்களுடைய பிற்கால வாழ்க்கை வெளியே தலை காட்ட முடியாது உங்களுக்கு தெரியும் ஒரு வதந்தியை பரப்பி விட்டாலே அதை உண்மையாக்குகின்ற youtube சனல்கள் தான் தொண்னூறுவீதமாக நடந்து கொண்டிருக்கிறது.
காரணம் தாங்கள் பணம் சம்பாதிப்பதற்காக இங்கே பொறுப்பாக இயங்குகின்ற பல youtube சனல்களும் அடிபட்டுக் கொண்டிருக்கிறீர்கள் பொறுப்பாக இயங்குகின்றோம் ஊழலை கண்டுபிடிக்கின்றோம் என்று ஊழல் எதிர்ப்புக்கு முகம் காட்டாமல் ஒரு முகநூல் பக்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றவர்களும் அதற்குள்ளும் பல செய்திகளை சேகரித்து ஊடகங்களுக்கு விற்பவர்களும் அதற்குள் இருக்கின்ற சில ஊடகவியலாளர்களும் நீங்களும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் யார் என்பது பலருக்கு தெரியும் தெரிந்தும் அவர்கள் உங்களை யார் என்று வெளியே காட்டாமல் இருக்கின்ற காரணம் நீங்கள் செய்கின்ற ஒரு சில நல்ல விடயங்களுக்காக மௌனமாக இருக்கிறார்கள் தயவு செய்து நீங்கள் எதையும் செய்யுங்கள் யாரையும் காட்டுங்கள் போலீஸ் அதிகாரி மகனா அல்லது ஊடகவியலாளரா youtube சனல் நடத்துவாரா அல்லது பொதுத் தொண்டு நிறுவனம் நடத்துவதாக வெளிநாட்டு முதலீடு செய்கின்றவரா அது உங்களுடைய சொந்த பிரச்சனைகள் என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது தயவு செய்து உங்களிடம் பணிவாக நாம் கேட்டுக் கொள்வது ஒரு பெண்ணினுடைய விடயத்தை சரியோ தவறோ நீங்கள் எடுத்து விட்டால் அந்த விடயம் பொய்யோ உண்மையோ கடைசி காலம் வரை அந்த பெண்ணுடைய வாழ்க்கையிலே அழுக்கு ஒட்டியதாக இருந்து அந்த பெண்ணுடைய வாழ்க்கையை சீரழித்து விடும்.
அவர் தவறு செய்தாரா உண்மை செய்தாரா சரியாக செய்தாரா என்பது வேறு ஆனால் நீங்கள் புகைப்படங்களுடன் போடுகின்ற பொறுப்பற்ற தரவுகள் பொறுப்பற்ற மாதிரியான ஒரு சில பதிவுகளை தயவுசெய்து நிறுத்தி கொள்ளுங்கள்.
உங்களுக்கு தெரியும் எப்படி அவர்களை திருத்த வேண்டும் என்று இவ்வளவு தூரம் தரவுகளை எடுக்கின்ற நீங்கள் பெண்களை மாத்திரம் நீங்கள் யாரை என்னவாவது செய்யுங்கள் பெண்களுடைய தரவுகள் போடுகின்ற போது ஒன்றுக்கு பத்து தடவை யோசித்து அவர்களை பழிவாங்கும் முகமாக அவர்கள் உங்களைப் பற்றி விரிவாக பேசியிருந்தாலும் நீங்களும் தாயோடும் தங்கையோடும் மனைவியோடும் பிள்ளைகளோடும் வாழ்கின்றவர்கள் அந்த பெண்கள் சில வேளைகளில் துணிந்து எங்களுடைய மரியாதை போய்விட்டது என என்று உங்களை அறிந்து உங்களைப் பற்றி பகிரங்கப்படுத்தினால் உங்கள் குடும்ப மும் தெருவில் நிற்கும் அந்த மானம் மரியாதை தேவையில்லை .
பெண்களை இழுத்துப் பேசுவதனால் அவருடைய வருங்காலம் பாதிக்கப்படும் அவர்கள் மனம் நோவது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் பரம்பரைக்கும் ஒரு இழுக்காக அமையும்.
- இலங்கையன்-
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




