தேர்தல் திணைக்களம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது! சுயேட்சைக்குழு வேட்பாளர்

#SriLanka #Election #Lanka4 #Local council
Mayoorikka
1 week ago
தேர்தல் திணைக்களம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது! சுயேட்சைக்குழு வேட்பாளர்

வேட்புமனு நிராகாரிக்கப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறை சுயேட்சைக்குழுவின் முதன்மை வேட்பாளர் முன்னாள் வல்வெட்டித்துறை நகரபிதா, சபாரத்தினம் செல்வேந்திரா தேர்தல் திணைக்களம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

 யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்றைய தினம் (22) சனிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

 உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலத்திய போது வேட்புமனு தாக்கலின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் தொடர்பான அறிவுறுத்தலுக்கு அமைவாக அவற்றை தயார் செய்து சமர்ப்பித்திருந்தோம். 

 வேட்புமனு தாக்கல் 17 ஆம் திகதி இடம்பெற இருந்த நிலையில் இறுதி நேரத்தில் 16 ஆம் திகதி வேட்பாளர்களது பிறப்பு சான்றிதழ்களின் மூலப்பிரதி கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என திடீரென மாற்றம் செய்திருந்தனர்.

 குறித்த மாற்றம் தொடர்பில் போதிய அறிவுறுத்தல் எதனையும் வழங்காதது அவர்களது தவறாகும். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்ற சமயத்தில் மாவட்ட செயலக வளாகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் தரப்பினருக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் எமது ஆவணங்களையும் சரிபார்த்திருந்தார்கள். 

இதன்போது பிறப்பு சான்றிதழ் பிரதியில் சமாதான நீதவான் மூலம் உறுதிப்படுத்தி வழங்குமாறு அறிவுறுத்தியிருந்தார்கள்.

 உடனடியாக அதனை செய்தே நாம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தோம். மேற்குறித்த மாற்றம் குறித்து உதவி வழங்குவதற்காக இருந்த உத்தியோகத்தர்கள் கூட எதனையும் எமக்கு தெரிவிக்கவில்லை. இந்த விடயத்தில் தேர்தல் திணைக்களம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742612532.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!