இலங்கையில் தரித்து நிற்கும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படை கப்பல்’!
#SriLanka
#Astrology
#world_news
#Ship
#lanka4_news
#Lanka4_india_news
#Lanka4_sri_lanka_news
Dhushanthini K
1 week ago

ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் 'MURASAME' உத்தியோகபூர்வ விஜயத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தக் கப்பல் இன்று (22) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் வரும் 25 ஆம் திகதிவரை நாட்டில் தரித்து நிற்கும்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள 'MURASAME' என்ற நாசகார கப்பல் 151 மீட்டர் நீளமும் 200 பேர் கொண்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது.
கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் ஹயாகவா மசாஹிரோ ஆவார்.
கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, கப்பலின் குழுவினர் நாட்டின் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




