மலையக மண்ணில் இருந்து சாதனை படைத்த இருவர்!

லிந்துலை - தங்கக்கலை, கேம்பிரி கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த பொல்ராஜ் சபேஷ்ராஜ் (ஹரீஷ்) தனது கல்விப் பயணத்தில் முக்கியமான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
லிந்துலை - மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் 1-11ஆம் வகுப்பு வரை முடித்த இவர், அக்கரப்பத்தனை ஹோல்ப்ரூக் விஞ்ஞான கல்லூரியில் 2016-2018 ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையை முடித்தார்.
அதன் பின்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 4 வருட பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் கட்டிடத் தொழில்நுட்பத்துறையில் சிறப்பு பட்டம் (BET Honors) பயின்று, கடந்த மார்ச் 19ஆம் திகதி தனது பட்டத்தைப் பெற்றுள்ளார்.
அதேபோல் யாழ். பல்கலைக்கழகத்தின் 39 வது பொது பட்டமளிப்பு விழாவில் புசல்லாவை, சோகம தோட்டம் மேல் பிரிவை சேர்ந்த செல்வி கலைச்செல்வன் சந்திரலேகா, பொறியியல் தொழில்நுட்பம் (Bachelor of Engineering Technology Honours) Specialization in Construction , Second ) பட்டம் பெற்றுள்ளார்.
இவர் புசல்லாவை இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவியாவார். தனது வெற்றிக்கு துணை நின்ற பெற்றோர், ஆசிரியர்கள் நண்பர்கள் மற்றும் ஊக்கப்படுத்திய அனைவருக்கும் சந்திரலேகா நன்றி தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




