குளிர்பானம் என நினைத்து டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு! யாழில் துயரம்

#SriLanka #Jaffna #Death #baby
Mayoorikka
1 week ago
குளிர்பானம் என நினைத்து டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு! யாழில் துயரம்

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் குளிர்பானம் என்று நினைத்து போத்தலில் இருந்த டீசலை அருந்திய குழந்தை உயிரிழந்துள்ளது.

 வீட்டின் அருகே இருந்த டீசல் போத்தலை குழந்தை குளிர்பானம் என்று நினைத்து அருந்தியதாகவும், இதைப் பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி நேற்று (23) குழந்தை உயிரிழந்தது. 

 யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் உள்ள நாராந்தனை பகுதியைச் சேர்ந்த ஒரு வயதும் ஒன்பது மாதங்களுமான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742765884.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!