ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா ரஜீவன் நக்கல் நையாண்டி! காட்டமடைந்த மக்கள்

#SriLanka #Jaffna #Development #Lanka4 #Archuna
Mayoorikka
1 day ago
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அர்ச்சுனா ரஜீவன் நக்கல் நையாண்டி! காட்டமடைந்த மக்கள்

யாழ். நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோர் ஒருவருக்கொருவர் அரசியல் ரீதியான நக்கல் நையாண்டிகள் செய்து நேரத்தை வீண்விரயம் செய்ததால் கூட்டத்தில் பங்கேற்ற பல பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

 நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தலைமையில் இடம்பெற்றது.

 கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. இதன்போது பல விடயங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ரஜீவன் ஆகியோர் ஒருவருக்கொருவர் அரசியல் ரீதியான நக்கல் நையாண்டிகள் செய்து நேரத்தை வீண்விரயம் செய்ததால் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

 "உங்கள் அரசியலையும் நக்கல், நையாண்டிகளையும் இங்க கதைச்சு நேரத்தை வீணாக்காதீர்கள்" - என்று சபையில் அவர்கள் காட்டமாகத் தெரிவித்தனர். 

அதன் பின்னர் ஓரளவு அரசியல் நையாண்டிகள் இன்றி கூட்டம் முன்னெடுக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742765884.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!