2050 இல் இலங்கை இன்னும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும்! ரணில் எச்சரிகை

இந்தியாவின் ஆதரவு நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது, 2050 இல் இன்னும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எச்சரித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில் இந்தியா நமது நெருங்கிய அண்டை நாடு. அது அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனா அல்ல. எனவே இலங்கை செய்ய வேண்டியது இந்த உறவை சிறப்பாகப் பயன்படுத்துவதாகும்.
இலங்கை தனது வேலையை இந்தியா மூலம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் இலங்கை 4.3 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறவில்லை என்றால், நமது நாடு என்னவாக இருந்திருக்கும்?”. இந்தியாவின் அதானி குழுமத்தின் முதலீட்டு முயற்சி இலங்கைக்கு மேலும் பல முதலீடுகளைக் கொண்டு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
முதலீட்டை முன்னுரிமையாகக் கொண்டு இலங்கை முன்னேற இதுவே ஒரே வழி.இந்தியாவை நாம் நிராகரித்தால், நாம் ஒருபோதும் வளர்ச்சியடைய மாட்டோம், என்று அவர் எச்சரித்தார்.
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், முன்னேற இந்தப் பாதையைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கூறினார்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



