வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சிறிரெலோ உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

#SriLanka #Election #Lanka4 #Court
Mayoorikka
4 days ago
வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சிறிரெலோ உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

உள்ளூராட்சி சபை தேர்தல் 2025 ற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது. இதன்போது நாடு முழுவதும் பல கட்சிகளினதும், சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் அதிகளவில் நிராகரிக்கப்பட்டிருந்தது. 

 இதன்போது, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு ஜனநயாக தேசிய கூட்டணி (தபால் பெட்டி) கட்சி சார்பில் கையளிக்கப்பட்ட வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டிருந்தது. 

 இந்திலையில், இக்கட்சியின் தேர்தல் முகவரும், கூட்டணி கட்சியான சிறிரெலோ கட்சியின் செயலாளருமான ப.உதயராசா அவர்களின் தலைமையில் கொழும்பு உயர் நீதிமன்றில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நீதிபதிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றைய தினம் (27.03) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 இதேவேளை, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறித்த இதே கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு பின்னர் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து குறித்த வழக்கு விசாரணையின் பின்னர் மீளவும் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742765884.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!