தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளின் வேட்பாளர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும்-சி.வி.கே.சிவஞானம்
#SriLanka
Lanka4
3 days ago

தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளின் வேட்பாளர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இலங்கை என்ற தேசியத்துக்குள் போகாமல் இருப்பதற்கே விரும்புகிறோம் என்பதை எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலின் ஊடாக கூற வேண்டும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியல் நோக்கங்களுக்காகவே தெற்கில் உள்ள கட்சிகள் வடக்கை நோக்கி வருவதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.



