2025 ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கையர்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2025 ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் 120 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ரன்சிலு ஜெயதிலகே, அந்த எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, டோங்கா மற்றும் சமோவாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் பங்கேற்றனர். அங்கு தங்கப் பதக்கம் வென்ற ரன்சிலு ஜெயதிலகே, ஆசிய பசிபிக் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
இது தொடர்பாக ரன்சிலு ஜெயதிலகே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, மெல்போர்னில் 4,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு முன்னால் சிங்கக் கொடியை உயர்த்த முடிந்தது என்று கூறியுள்ளார்.
தனக்கு பயிற்சியாளர், மேலாளர் அல்லது சம்பளம் இல்லை என்றும், ஆனால் ஒருபோதும் சிங்கக் கொடியை கீழே போட மாட்டேன் என்றும், விரைவில் உலக அரங்கில் சிங்கக் கொடியை உயர்த்துவேன் என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




