அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்!

#SriLanka #Colombo #GunShoot
Lanka4
1 day ago
அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்!

அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் வீடொன்றிலிருந்த நபரொருவர் மீது, உந்துருளியொன்றில் பிரவேசித்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொக்கல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

குறித்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!