யாழ்ப்பாணம்- திருச்சி இடையே விமான சேவைகள் ஆரம்பம்

#India #SriLanka #Jaffna #Flight #Tamil Nadu #Lanka4
Mayoorikka
1 day ago
யாழ்ப்பாணம்- திருச்சி இடையே விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளன.

 திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வேளை, விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

 நிகழ்வில் இந்திய துணைத் தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள் , விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 இந்த விமான சேவையானது தினசரி மதியம் 1.25 மணிக்குத் திருச்சியில் இருந்து புறப்பட்டு 2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.15 மணிக்குப் புறப்பட்டு திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும்.

 அதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர் திருச்சி சென்று திருச்சி ஊடாக சிங்கப்பூர் பயணிக்க கூடியவாறான விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளமையால் கொழும்பு சென்று சிங்கப்பூர் செல்வதற்கான நேர விரயம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1743249644.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!