பொலிஸாரை வீட்டுக்குள் வைத்து தாக்கிய இளைஞர்கள்!

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில், வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (31)இடம்பெற்றது. தலைகவசம் அணியாமல் அதிக சத்தத்துடன் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிஸார் நிறுத்த முயன்றபோது, சந்தேகநபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், சிலர் சேர்ந்து பொலிஸாரை வீட்டுக்குள் இழுத்து சென்று அடைத்துவைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், பொலிஸாரின் கையடக்க தொலைபேசியை சேதப்படுத்தி, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது .
குறித்த சம்பவம் தொடர்பில் அடம்போடை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



