அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!

#SriLanka #prices #Food
Mayoorikka
6 days ago
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு!

7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க லங்கா சதொச நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி, பெரிய வெங்காயம், டின் மீன், சிவப்பு சீனி, பருப்பு, நாட்டு அரிசி, கோதுமை மா மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படும் என சதொச நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

 சதொச நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைய, பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 140 ரூபாவாகும். டின் மீன் 425 கிராமின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 395 ரூபாவாகும்.

 மேலும், சிவப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 255 ரூபாவாகும். சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 265 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

 நாட்டு அரிசியின் விலை கிலோ கிராமிற்கு 7 ரூபா குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 213 ரூபாவாகும். மேலும், கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 155 ரூபாவாகும்.

 அத்துடன், சிவப்பு பச்சை அரிசியின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 217 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1743743751.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!