புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தரப் பொங்கல்! விளக்கு வைக்கும் நிகழ்வு
#SriLanka
#Temple
#Lanka4
Mayoorikka
12 hours ago

வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தரப்பொங்கலுக்கான பாரம்பரிய விளக்கு வைக்கும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி இன்று இடம்பெற்றது.
இந்நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி பகல் இரவுப் பொங்களாக நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், பொங்களுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.
இன்று மாலை பண்டம் எடுப்பதற்காக பண்ட வண்டில் ஆலயத்திலிருந்து மீசாலை புத்தூர் சந்தி வரை சென்று பொங்கல் தினத்தன்று பண்ட வண்டில்கள் ஆலயத்திற்கு வரவுள்ளன.
இந்த நிகழ்வானது நூற்றாண்டுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற பாரம்பரிய முறை என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




