உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 35 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#people #Lanka4 #Numerology
Prasu
1 week ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 35 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

அதிவேகமான முன்னேற்றத்தையும் வீண் சிக்கலையும் இந்த எண் தரும். அனாவசியமான குழப்பமும் சச்சரவும் இந்த எண்ணில் காணப்படுகிறது .

தலைப்பாகை அணிந்த ஒரு மனிதன் நீளமான தடியை பிடித்து கொண்டு நிற்பதையும் அது மட்டுமல்லாமல் 7 தடிகளும் மலைகளும் கொண்ட எகிப்திய சிற்பங்கள் இந்த 35 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன .

கடக ராசியில் பகை பெற்ற எண் இந்த 35 ம் எண்ணாகும் . இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் இந்த எண்ணை பெயரில் பெற்ற வியாபார ஸ்தலங்கள் எப்பொழுதும் விரயத்தை நோக்கியே இழுக்கபடுகிறது .

மனம் அலை கடலென அமைதியை இழந்து நிற்கும் . பணம் வரும் வழி நியாயமானதாக இருக்காது . தன்னை சார்ந்தவர்களால் சிரமங்கள் ஏற்படக்கூடும் . வயிறு முதுகு பல் போன்ற உடல் அங்கங்களில் தொந்திரவு ஏற்படும் .

" பெரிய வியாபாரம் " " பெரும் செல்வந்தர் " எனும் நிலைகள் ஏற்பட்டாலும் கூட திடீரென ஒரு நாள் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாய் இந்த எண் காரர்கள் நிற்பார்கள் . சில நேரங்களில் திட சித்தம் இல்லாமல் கூட போகும் .

எதிர்பாராத விபத்துகளும் திடீர் சரிவுகளும் கஷ்டங்களும் கண்டிப்பாக இந்த 35 ம் எண்ணுக்கு உள்ளதால் பெயர் எண்ணாகவோ பெயரின் ஹீப்ரு எண்ணாகவோ 35 ம் எண் வரவே கூடாது .

மேலும் பெயரின் ஹீப்ரு எண்ணாக 8 ம் எண் வரவே கூடாது என்று என்னுடைய நியுமராலஜி கட்டுரையில் பல இடங்களில் நான் கூறி இருப்பதால் இந்த 35 எண் பெயரின் ஹீப்ரு எண்ணாக வரும்பொழுது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதை கூறி கொள்கிறேன்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744235464.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!