திருகோணமலை துப்பாக்கிச்சூடு – உயிரிழந்தவர் விபரம் வெளியானது!

#SriLanka #Trincomalee #Police #Investigation #LANKA4 #GunShoot
Abi
1 hour ago
திருகோணமலை துப்பாக்கிச்சூடு – உயிரிழந்தவர் விபரம் வெளியானது!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் நேற்றிரவு (02) முச்சக்கரவண்டியை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் கடற்படை சிப்பாய் என காவல்துறை ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

முச்சக்கரவண்டியைச் செலுத்திய 39 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், ஆனந்தகுளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடைய இருவர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் சிலர் இருந்தபோது, அங்கு வந்த துப்பாக்கிதாரி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. T-56 ரக தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தியே இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் உள்ளிட்ட பல காவல்துறைக் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!