கிராமத்து சுவையில் மத்திமீன் குழம்பு!

#SriLanka #Cooking #lanka4_news #ADDA #shelvazug #ADDAADS #SHELVA FLY
Dhushanthini K
2 weeks ago
கிராமத்து சுவையில் மத்திமீன் குழம்பு!

பொதுவாகவே அசைவ பிரியவர்களுக்கு மீன் குழம்பின் மீது ஒரு தனி பிரியம் இருக்கும். அதுவும் கிராமத்து பாணியில் மசாலாக்களை அரைத்து வைத்த மீன் குழம்பு என்றால், சொல்லவே வேண்டாம்.

குறிப்பாக மத்தி மீன், தமிழர்களின் பாரம்பரிய உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த மீனில் சுமார் 270 IU அளவுக்கு வைட்டமின் டி நிறைந்து காணப்படுகின்றது.

மத்தி மீன் பார்க்கத்தான் மிகச்சிறியது. ஆனால் இதிலுள்ள சத்துக்களும் சுவையும் வேறு எந்த மீனிலும் கிடைக்காது.

இதில் வைட்டமின் டி,பொட்டாசியம்,நியாசின்,செலீனியம்,வைட்டமின் பி12 அயோடின்,ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்,​ஆகிய வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளது.மத்தி மீனில் மிகக் குறைந்த அளவில் நிறைய பலன்களைப் பெற முடியும்.

வைட்டமின் டி நிறைந்த மத்தி மீன் குழம்பு... கிராமத்து பாணியில் எப்படி செய்வது? | Health Sardine Fish Curry Recipe In Tamil

இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மத்தி மீனை கொண்டு அசத்தல் சுவையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மத்தி மீன் -அரை கிலோ

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

கடுகு -ஒரு தே.கரண்டி

சீரகம் -ஒரு தே.கரண்டி

வெந்தயம் -ஒரு தே.கரண்டி

சின்ன வெங்காயம் -100 கிராம்

தக்காளி-மூன்று

புளி -50 கிராம்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் -அரை

பச்சை மிளகாய் -இரண்டு

மிளகாய்தூள் -அரை தே.கரண்டி

மல்லி தூள் -மூன்று தே.கரண்டி

கருவேப்பிலை -ஒரு கொத்து

அரைத்த தேங்காய் பேஸ்ட் -50 கிராம்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சீரகம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து பொரியவிட்டு, சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்துக்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து தக்காளி கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் மல்லி தழை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் புளிக்கரைசல் மற்றும் அரைத்த தேங்காய்வை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

இறுதியில் சுத்தம் செய்து வைத்துள்ள மத்தி மீனை சேர்த்து ஒருமுறை லேசாக கிளறிவிட்டு மூடி வைத்து பத்து நிமிடம் வேகவிட்டு இறக்கினால் அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த மத்தி மீன் குழம்பு தயார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744237010.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!