தமிழரசுக் கட்சி வசமானது புதுக்குடியிருப்பு பிரதேச சபை!

#SriLanka #Lanka4 #IlankaThamilarasukKadsi #SHELVAFLY
Mayoorikka
10 months ago
தமிழரசுக் கட்சி வசமானது புதுக்குடியிருப்பு பிரதேச சபை!

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இருவரே வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர், உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

 அதன்படி புதுக்குடியிருப்பு பிரதேச சபையினுடைய தவிசாளராக வேலாயுதம் கரிகாலன், உப தவிசாளராக சுந்தரம் பரந்தாமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 புதிய தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் ச.கிருசாந்தன் தலைமையில் பிரதேசசபை மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது.

 நிகழ்வில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் , உபதவிசாளர், உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர். 

 நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி எஸ்.சத்தியரூபன், ஒட்டிசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி ஆ.பகீரதன், உலகளந்த பிள்ளையார் ஆலய குருக்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!