தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு!

#SriLanka #Mullaitivu #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Soruban
10 months ago
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு!

தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் 15.09.2025 இன்று இடம்பெற்றது.

குறிப்பாக தியாகதீபம் திலீபனின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் மாவீரர் ஒருவரின் தாயாரான செ.தவராணி ஈகைச்சுடரினை ஏற்றி குறித்த நினைவேந்தலை ஆரம்பித்துவைத்தார்.

தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4