அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது தொடர்பான வர்த்தமானி வெளியீடு!
#SriLanka
#Gazette
#vehicle
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் விதிகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட முடிவுக்கு மாறாக செயல்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.
இருப்பினும், சீட் பெல்ட் இல்லாத சில வாகனங்களுக்கு சீட் பெல்ட்களை பொருத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் மஞ்சுள குலரத்ன மேலும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
