இலங்கையை அமெரிக்காவாக மாற்ற வேண்டாம்! அர்ச்சுனா கோரிக்கை
#SriLanka
#America
#Archuna
#LGBTQ
Mayoorikka
2 months ago
அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த பெற்றோரும் தனது பிள்ளை ஓரினச் சேர்க்கையாளராக மாறுவதை விரும்பமாட்டார்கள்.
நாங்கள் பின்பற்றுவது இந்து, பௌத்தம் மற்றும் இஸ்லாம் மதங்களாகும், இவற்றில் இதற்கு இடமில்லை.
யாருக்காவது ஏதும் பிரச்சினை என்றால் வைத்திய முறையில் தீர்வை வழங்குவோம். நாட்டை வீணாக்க முடியாது. யாருடைய பிள்ளையும் நாசமாக விடமாட்டேன்.
இந்த நாட்டை அமெரிக்காவாக மாற்ற வேண்டாம். அதை சட்டமாக்கி எதிர்கால சந்ததியை நாசமாக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
