இலங்கையில் 04 இலட்சம் என்ற புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!
#SriLanka
#Gold
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று இலங்கையில் தங்கத்தின் விலை 60,000 அதிகரித்துள்ளது என்று சந்தை தரவுகள் காட்டுகின்றன.
அதன்படி, இன்று காலை (16), கொழும்பில் உள்ள செட்டடியார் தெரு தங்க சந்தையில் "22 காரட்" தங்கத்தின் ஒரு பவுண் 10,000 அதிகரித்துள்ளது.
மேலும் புதிய விலை 360,800 ரூபா ஆகும். கடந்த வியாழக்கிழமை, 305,300 ரூபாக பதிவாகியிருந்தது.
இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை 330,000 ரூபாவாக இருந்த "24 காரட்" தங்கத்தின் ஒரு பவுண் விலை இப்போது 390,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
