ரணில் -சஜித் ஒன்றிணைவு இவ்வருடத்திற்குள் வெற்றியளிக்கும்!
#SriLanka
#Sajith Premadasa
#Ranil wickremesinghe
Mayoorikka
2 months ago
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இவ்வருடத்துக்குள் வெற்றியளிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களில் 50 சதவீதமானோர் தற்போது தமது முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர்.
எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சங்கமம் இவ்வருடத்துக்குள் வெற்றியளிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
2022 இல் நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்த நபர்களுக்கு எதிராக அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
(வீடியோ இங்கே )
அனுசரணை
