லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு

#SriLanka
Mayoorikka
8 months ago
லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு

கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 இந்த விபத்து சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (07) அதிகாலை பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற லொறி எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

 இதன்போது, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், முச்சக்கர வண்டியின் பின்னால் பயணித்த ஒருவரும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 

 இந்நிலையில், முச்சக்கர வண்டியின் பின்னால் பயணித்த பயணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4