ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கைது!

#SriLanka
Mayoorikka
1 week ago
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கைது!

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 பாராளுமன்ற உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 முன்னாள் சபாநாயகர் நேற்று (11) பயணித்த ஜீப் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது. சப்புகஸ்கந்த தெனிமுல்ல பகுதியில் இந்த விபத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

 காரில் பயணித்த 25 வயது பெண், அவரது 6 மாத குழந்தை மற்றும் அவரது 55 வயது பாட்டி ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

 குறித்த குழந்தை சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!