தொடர்ந்து மூடப்படும் பிரான்சின் லூவ்ரே அருங்காட்சியகம்
#France
#Protest
#closed
#Workers
#museum
Prasu
2 hours ago
பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த நடவடிக்கை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியத்தில் அண்மையில் இடம்பெற்ற மோசமான கொள்ளை சம்பவம், பாதுகாப்பு அச்சுறுத்தல், நீர் கசிவு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கலாச்சார அமைச்சக அதிகாரிகள் இந்த வாரம் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
இதன்போது திட்டமிடப்பட்ட நிதி குறைப்பை இரத்து செய்யவும், ஊழியர்களுக்கான புதிய ஆட்சேர்ப்பைத் தொடங்கவும், இழப்பீட்டை அதிகரிக்கவும் முன்மொழிந்திருந்தனர்.
(வீடியோ இங்கே )