தைவானைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்!

#world_news #Earthquake
Mayoorikka
6 months ago
தைவானைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்!

தென்கிழக்கு தைவானில் உள்ள கடலோர மாவட்டமான தைடுங்கில் 24ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 இதனால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்களும் அதிர்ந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும், சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 11.9 கிலோமீட்டர் (7.39 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தைவான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 2016 ஆம் ஆண்டு தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்தனர், 1999 இல் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 க்கும் மேற்பட்டோர் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4