வாசகர்கள் அனைவருக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள்!

#SriLanka #Festival
Mayoorikka
3 hours ago
வாசகர்கள் அனைவருக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள்!

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரானின் பிறப்பை நத்தார் பண்டிகையாக இன்று வியாழக்கிழமை (25) கொண்டாடுகின்றனர். 

 இறைவன் எளிமையானவர். ஏழை, எளியவர்களுக்கு நெருக்கமானவன். எளிய சூழல்களில் சஞ்சரிப்பவர். ஏழை - பணக்காரர், பாமரர் - படித்தவர், உயர்ந்தவர் - தாழ்ந்தவர், நல்லவர் - கெட்டவர், கறுப்பர் - வெள்ளையர் என எந்த பாகுபாடும் பார்க்காதவர். 

 எல்லோருக்கும் பொதுவான ஒளிமயமானவன். கருணையின் ரூபமாய் வாழ்கிறவன். இதையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இந்த உலகுக்கு உணர்த்துகிறது.

 இறைவன் தன் மகனான பாலகன் இயேசுவை ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறக்கச் செய்தார். கந்தல் துணிகளால் சுற்றிக்கிடக்கவும் செய்தார். 

 ஏனென்றால், இறைவன் தான் விரும்புவது எளிமையையே. அந்த எளிமையே இயேசுவின் வாழ்நாள் முழுவதும் அவரோடு இருந்தது. 

அதுமட்டுமன்றி இயேசு அன்பானவர். அன்பையே அவர் தன்னைப் பின் தொடர்ந்தவர்களுக்கு போதனையாகச் செய்தவர். 

 உலகில் அமைதியும் சுபீட்சமும் நிலவ இயேசு பிரானை இந்த நன்னாளில் பிரார்த்திப்போம்.

 அனைவருக்கும் lanka4 ஊடகத்தின் நத்தார் தின வாழ்த்துக்கள்....

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!