பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல் அவசியம்! உலக சுகாதார ஸ்தாபனம்

#SriLanka #World_Health_Organization
Mayoorikka
2 hours ago
பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல் அவசியம்!  உலக சுகாதார ஸ்தாபனம்

பேரனர்த்தத்தின் பின்னரான மீட்சி என்பது சேதமடைந்த கட்டமைப்புக்களை மீளக்கட்டியெழுப்புவது மாத்திரமன்று. மாறாக சிதைவடைந்த உள்ளங்களின் காயத்தை ஆற்றுவதும், சமுதாய ரீதியான நலனை மீளுறுதிப்படுத்துவதுமாகும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தில் கொழும்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.

 அந்தவகையில் கொழும்பிலுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் கிளை அலுவலகமானது பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு, கண்டி மாவட்டத்திலுள்ள பொதுச்சுகாதார ஊழியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் அவசியமான பயிற்சிகளை வழங்கியுள்ளது.

 உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் இலங்கை சமுதாய மருத்துவக் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட இப்பயிற்சி வழங்கலில் பொதுச்சுகாதார ஊழியர்கள் அக்கறையுடனும், உணர்திறனுடனும், இரக்கத்துடனும் எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை அணுகவேண்டும் என்பது குறித்து விசேடமாகப் பயிற்றுவிக்கப்பட்டது.

 இந்த உளவியல் பயிற்சி வழங்கலின் ஊடாக பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கு அவசியமான உளவியல் சார்ந்த உதவிகளை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வர் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொழும்பு அலுவலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!