யாழ் மாவட்டத்தில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
#SriLanka
#Jaffna
#Toilet
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி மலசலக்கூடங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த துறைசார் அதிகாரிகள், யாழ். மாவட்ட புள்ளிவிபரங்களின்படி மாவட்டம் முழுவதும் சுமார் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
