காற்றுச் சுழற்சி! வடக்கு கிழக்கில் கன மழை பரவலடையும் வாய்ப்பு!

#SriLanka #weather
Mayoorikka
3 hours ago
காற்றுச் சுழற்சி! வடக்கு கிழக்கில் கன மழை  பரவலடையும் வாய்ப்பு!

முன்னரே குறிப்பிட்டபடி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. 

இது அடுத்து வரும் நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 02.01.2026 அன்று இது தாழமுக்கமாக மாற்றம் பெற்று இலங்கையின் கிழக்கு தென்கிழக்கு திசையில், இலங்கையின் கரையோரமாக நிலவி பின் இலங்கைக்கு தெற்காக மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 இதன் காரணமாக இன்று கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்க தொடங்கியுள்ளது. இன்றும் (29.12.2025) வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

 நாளையும் (30.12. 2025) முதல் வடக்கு, கிழக்கு, வட மத்திய, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மழை பரவலடையும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 31.12.2025 முதல் 04.01.2026 வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா வட மத்திய, மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

 இந்நாட்களில் குறிப்பாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பதுளை, நுவரெலியா, காலி,மாத்தறை கண்டி மட்டக்களப்பு, அம்பாறை, மாவட்டங்களின் சில இடங்களில் 31.12.2025, மற்றும் எதிர்வரும் ஜனவரி 01, 02, 03 ம் திகதிகளில் 150 மி.மீ. க்கு மேற்பட்ட மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

 குறிப்பாக.... எதிர்வரும் 31.12.2025 அன்று கொஸ்லாந்தை, வெல்லவாய, புத்தள, கல்மதுல்ல, ஹப்புத்தள, அதல போன்ற பகுதிகளிலும், எதிர்வரும் 01.01.2026 அன்று வெலிப்பிட்ட, கொரவின்ன, லபுகெங்கொட, மித்தெனிய, திருகோணமலை போன்ற பகுதிகளிலும், எதிர்வரும் 02.01.2026 அன்று நாகெட்டிய, லெமஸ்தோட்ட, கொட்டபத்ம, ஏகொடவத்த, கொஸ்லாந்தை, வெல்லவாய, புத்தள, கல்மதுல்ல, ஹப்புத்தள, அதல போன்ற பகுதிகளிலும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

( திகதி மற்றும் இடங்களில் சில மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ளவும்) இந்த கனமழை மத்திய, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் நிலச்சரிவு அனர்த்தத்தை தூண்டலாம்.

 ஆகவே அன்புக்குரிய மலையக உறவுகளே, இந்த நாட்களில் கனமழையுடன் கூடிய நிலச்சரிவு அனர்த்தங்கள் தொடர்பில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!