அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி!
#SriLanka
Mayoorikka
2 hours ago
2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 5.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்கால பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 11 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் மானியங்கள் 4961.8 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளன.
அத்துடன் மத்திய அரசாங்கத்தின் கடன் சுமை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2024ஆம் ஆண்டின் இறுதியில் 28,738 பில்லியன் ரூபாவாக இருந்த மத்திய அரசாங்கத்தின் கடன், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 29,675 பில்லியன் ரூபா வரை உயர்ந்துள்ளது.