பொது மக்களை வீதிக்கு இறங்குவோம்: அரசாங்கத்துக்கு எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)
வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் திட்டமிட்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆலய கட்டுமானங்கள் ஒருபோதும் இலங்கையில் அமைதியைக் கொண்டுவராது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சிஸ்டம் சேஞ்சை முன்வைத்து ஆட்சிபீடம் ஏறியுள்ள இடதுசாரி ஜனநாயகம் பேசும் இன்றைய அரசு அத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி நாட்டின் நிலையான அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கோரியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களில் அடாத்தாகப் பிடித்த பல காணிகளில் இராணுவத்தினரின் உதவியுடன் புத்தகோயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இப்பொழுது ஆட்சியிலிருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இவற்றைத் தடுத்து நிறுத்தாமல் சட்டவிரோதமாகக் கட்டப்படும் புத்த விகாரைகளை இன்னும் ஆதரித்து செயற்பட்டு வருகின்றது.