பேரழிவுகளில் சிக்குண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தற்பொழுதும் முகாம்களில் வசிப்பு!
#SriLanka
Mayoorikka
3 hours ago
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்குண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இன்று(30) வரை தொடர்ந்தும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, 358 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் 10,340 குடும்பங்களைச் சேர்ந்த, 34,175 பேர் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்றிரவு(29) வெளியிட்ட இற்றைப்படுத்தப்பட்ட அறிக்கையிலேயே இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தங்களில் 638 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் 175 பேர் காணாமல் போயுள்ளதாகப் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிட்வா சூறாவளியால் 1,121 வீடுகள் முழுமையாகவும், 114,314 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.