பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 90,000 காவல்துறையினர்
#France
#people
#New Year
#Security
Prasu
1 hour ago
புத்தாண்டை முன்னிட்டு பிரான்ஸ் முழுவதும் 90,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் 10,000 பேர் பரிஸ் மற்றும் அதன் அருகிலுள்ள சிறிய புறநகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
உள்துறை அமைச்சர் லோரான் நுன்யெஸ், மாகாண ஆளுநர்களுக்கு கடுமையான அதிகாரத்தை பின்பற்ற உத்தரவுகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புத்தாண்டைக் கொண்டாட மக்கள் அதிக அளவில் வெளியே கூடுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆண்டின் இறுதியில் வழக்கமாக ஏற்படும் நகர்ப்புற வன்முறைகளைத் தடுப்பதற்காகவும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளிலும் இதே அளவிலான காவல் படை பயன்படுத்தப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )