இன்றைய ராசிபலன் (04.01.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பரணி: வியாபார பிரச்னைகள் விலகும். சகபணியாளர்கள் உங்கள் முயற்சிக்கு துணையாக இருப்பார்கள். கார்த்திகை 1: பண வரவு திருப்தி தரும். கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். மிருகசீரிடம் 1,2: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: மதியம் முதல் வேலைகளில் இருந்த தடை நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். திருவாதிரை: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பதட்டமின்றி செயல்படுவதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றமடையும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.
கடகம்
புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலையில் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். பூசம்: இழுபறியாக இருந்த ஒரு வேலையை முடிவிற்கு கொண்டு வருவீர். ஆதாயம் கூடும். ஆயில்யம்: எச்சரிக்கையுடன் செயல்படுவீர். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.
சிம்மம்
மகம்: லாபமான நாள். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். மதியத்திற்குமேல் திடீர் செலவுகள் தோன்றும். உத்திரம் 1: உங்கள் நீண்ட நாள் எண்ணம் பூர்த்தியாகும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.
கன்னி
உத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். அஸ்தம்: அனுசரித்துச் சென்று நினைத்ததை சாதிப்பீர். பொருளாதார நிலை உயரும். சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய கடன்கள் வசூலாகும்.
துலாம்
சித்திரை 3,4: புதிய முயற்சியில் ஈடுபடுவீர். உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் சுவாதி: வியாபாரத்தில் தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். விற்பனை அதிகரிக்கும். விசாகம் 1,2,3: உங்கள் முயற்சியில் கவனம் செலுத்துவீர். தொழில் முன்னேற்றமடையும்.
விருச்சிகம்
விசாகம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அனுஷம்: சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நடந்தேறும். கேட்டை: பெரிய மனிதர்களின் ஆதரவால் உங்கள் வேலைகள் முடியும். குடும்ப பிரச்னை தீரும்.
தனுசு
மூலம்: செயல்களில் காலை வரை லாபம் காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும். பூராடம்: மதியத்திற்கு மேல் உங்களது முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். உத்திராடம் 1: வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். பிறரிடம் வாக்கு வாதங்கள் வேண்டாம்.
மகரம்
உத்திராடம் 2,3,4: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். முயற்சி வெற்றியாகும். திருவோணம்: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். அவிட்டம் 1,2: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிரிகள் விலகிச்செல்வர்.
கும்பம்
அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். சதயம்: எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். போட்டியாளர் விலகுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுக்கும் முயற்சி ஆதாயம் தரும்.
மீனம்
பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உடல்நிலையில் சோர்வு ஏற்படும். உத்திரட்டாதி: அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ரேவதி: உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை உயரும்.
(வீடியோ இங்கே )