வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்!
#SriLanka
#Court Order
#Venezuela
Thamilini
3 days ago
வெனிசுலாவின் துணை ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
வெனிசுலாவின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க அவர் பதவி ஏற்றுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நிர்வாக தொடர்ச்சியையும் தேசத்தின் விரிவான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, வெனிசுலா பொலிவேரியன் குடியரசின் ஜனாதிபதி பதவியை ரோட்ரிக்ஸ் ஏற்றுக்கொள்வார்" என்று நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”