சஜித் ரணில் இணைவா? வெளியான முக்கிய தகவல் (வீடியோ இணைப்பு)
நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி கூட்டணி மட்டுமே ஒரே சாத்தியமான வழி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
“பிரிந்து நின்று நாட்டைப் பலவீனப்படுத்துவதை விட அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று எனது தந்தை எப்போதும் நம்பினார்.
எனவே, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவதற்கான முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம்.
இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இருப்பினும், நான் அந்த கட்சிகள் எதிலும் உறுப்பினர் அல்ல என்பதால், இது நடக்குமா என்று என்னால் சொல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார் தேசிய நலனுக்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்றுதான் உறுதியாக நம்புகின்றார் என தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியும் எதிர்க்கட்சிகளின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்தார். அத்தகைய ஒத்துழைப்புத்தான் தேசத்துக்குச் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான ஒரே வழி என்றும் அவர் மேலும் கூறினார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”