லஞ்ச் சீற் பாவனை தடை! திடீர் ஆய்வு மேற்கொண்ட தவிசாளர்
பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் லஞ்ச் சீற் பாவனை தடை முழுமையாக நடைமுறையில் உள்ளது. தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில், பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இணைந்து நேற்று இரவு உணவகங்களுக்கு நேரில் விஜயம் செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சகல உணவகங்களிலும் லஞ்ச் பாவனை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
குறித்த நடைமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் மீறும் உணவகங்களின் வியாபார உரிமத்தை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதி உணவகங்களில் லஞ் சீற் பாவனைக்கு முற்றாக தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. மீறுவோரினது வியாபார உரிமம் ரத்துச் செய்யப்படுமெனவும் கடுமையான நடைமுறை கொண்டுவரப்பட்டிருந்தது.
குறித்த நடைமுறை ஏனைய சபைகளுக்கு முன்னுதாரணமாக அமைந்திருப்பது சுகாதார தரப்பினர்கள் மத்தியில் வரவேற்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”