எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவிப்பு!

#SriLanka #weather #Disaster
Thamilini
1 day ago
எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவிப்பு!

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ மையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அவ் மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

நாட்டின் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 

 இந்த அமைப்பு மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து நாட்டின் கிழக்கு கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக  நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையிலேயே அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அறிவிப்பு வந்துள்ளது. 

இதற்கிடையில், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு குறித்த சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!