ஆண்டியர் சந்தியில் சுற்றுச் சந்தி : அபிவிருத்தி வேலை உடன் நிறுத்தம் !

#SriLanka #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
15 hours ago
ஆண்டியர் சந்தியில் சுற்றுச் சந்தி : அபிவிருத்தி வேலை உடன் நிறுத்தம் !

சம்மாந்துறை - ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சட்டமுரணான சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாயர் ஐ.எல்.மாஹிர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டமுரணான சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக, சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.மாஹிர் வழக்கு தொடர்ந்தார்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த செவ்வாய்கிழமை (06) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இதன்போது, நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் படி "அபிவிருத்திப் பிரதேசமாக" வர்த்தமானியின் மூலம் பிரகடனம் செய்யப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் 

அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும், உள்ளூராட்சி அதிகார சபையின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும். பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல் பல்வேறு தொழிநுட்பக் குறைபாடுகளோடு வீதி அபிவிருத்தி அதிகார சபையானது சட்டமுரணாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்தக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், நிறைவேற்றுப் பொறியியலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை (6) மன்றில் பிரசன்னமாகியிருந்த பிரதிவாதிகள் இவ்வழக்கை முன்கொண்டு செல்வது தொடர்பில் தமது ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர். 

மேற்படி ஆட்சேபனைகளை நிராகரித்த மன்றானது, மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைவாக, இவ்வழக்கின் பிரதிவாதிகளான வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த பிரதேசத்தில் எவ்வித அபிவிருத்தி வேலைகளிலும் ஈடுபடாமல் தற்போதுள்ள நிலமையை (Status Quo) தொடர்ந்தும் பேணுமாறு கட்டளை பிறப்பித்துள்ளது.

இவ்வழக்கானது மீண்டும் எதிர்வரும் 03.02.2026 யில் பிரதிவாதிகள் சார்பான காரணங்காட்டும் விசாரணைகளுக்காக (Show cause inquiry) திகதியிடப்பட்டுள்ளது.

                             இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!