ரி20 கிரிக்கெட் பார்க்கச் சென்ற வேன் விபத்து.! 5 பேர் காயம்
#SriLanka
#Accident
#Cricket
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 day ago
அநுராதபுரம் மிஹிந்தலை ஏ9 பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது இலங்கை - பாகிஸ்தான் ரி20 கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட்டு வேனில் வீடு திரும்பிய இளைஞர் குழுவொன்றினரே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மிஹிந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்