மீண்டும் அமைதிக்கான நோபல் பரிசை கோரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

#America #Nobel #Award #Trump
Prasu
21 hours ago
மீண்டும் அமைதிக்கான நோபல் பரிசை கோரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தான் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் வரலாற்றில் தன்னை விட நோபல் அமைதிப் பரிசுக்குத் தகுதியானவர் யாரும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் நோபல் அமைதிப் பரிசுக்கு என்னைப் போல தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை. 

ஆனால், ஒபாமா எந்த ஒரு பணியும் செய்யாமலே நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். இதுவரை சுமார் 8 பெரிய போர்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்துள்ளேன். அவற்றில் சில 25 முதல் 36 ஆண்டுகள் வரை நீடித்தவை" என்று தெரிவித்தார்.

அதேநேரம், சர்வதேச விதிகள் எனக்குப் பொருந்தாது என்று கூறியுள்ள டிரம்ப் , வெனிசுலா மற்றும் ஈரான் விவகாரங்களிலும் தான் தலையிடுவேன் என்று தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!